இந்த நிலையில், வாழை இலைக்காக வியாபாரிகள் இந்த கிராம பகுதிக்கு சென்று விவசாயிகளிடம் தினமும் ஒரு குறிப்பிட்ட அளவு வாழை இலை தரவேண்டும் என்று விலைபேசி ஒப்பந்தம் செய்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் வாழை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதேபோல் மரத்தால் செய்யப்பட்ட பொருட்கள், பேப்பர் பொருட்கள், மஞ்சள் துணிப்பை ஆகியவைகளின் வியாபாரமும் ஜரூராக நடந்து வருகிறது. தமிழக அரசின் ஒரே ஒரு உத்தரவால் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக மிகப்பெரிய மாற்றம் நடந்துள்ளதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.