கடல் சீற்றம் காரணமாக, திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க தடை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடலில் அலையின் வேகம் மிக அதிகமாக இருப்பதால், கோயில் நிர்வாகம் சார்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை சுற்றுலா தலங்களில் கடலில் பொதுமக்கள் இறங்க வேண்டாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக கடலோர பகுதிகளில் கடல் சீற்றம், கடல் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும் மற்றும் பேரலைகள் எழக்கூடும் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கையை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.