இதுகுறித்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், டிக் டாக் ஆப் தடை செய்யப்பட்டால் மகிழும் முதல் ஆள் நான்தான். அதை கண்டிப்பாக நான் வரவேற்பேன். டிக் டாக்கில் தேவையில்லாமல் பலரை கிண்டல் செய்கிறார்கள். எங்களை போன்ற அரசியல்வாதிகளை, பிரபலங்களை இந்த ஆப் மூலம் கிண்டல் செய்கிறார்கள். இதனால் அந்த ஆப்பிற்கு தடை விதிப்பது சரியான முடிவாகவே இருக்கும். லோக்சபாவில் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நாளை மறுநாள் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தமிழகம் வருகிறார். இதில் பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்க இருக்கிறோம். கட்சித் தலைமை கேட்டுக்கொண்டால் நான் மக்களவை தேர்தலில் போட்டியிட தயார் என்றார்.