நாங்களும் தேர்தல் வேலைகளில் பிசி தான்: ஜெயகுமார்!

வெள்ளி, 20 நவம்பர் 2020 (15:48 IST)
திமுகவின் தேர்தல் பிரச்சார பணிகள் குறித்து அதிமுக அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.
 
தமிழக சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதம் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளன. இந்நிலையில் இன்னமும் கூட்டணிகளே முடிவாகாத நிலையிலும் திமுக தனது தேர்தல் பிரச்சார பணியை தொடங்கிவிட்டது. 
 
இந்நிலையில் திமுகவின் தேர்தல் பிரச்சார பணிகள் குறித்து அதிமுக அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம் செய்துள்ளார். அவர் கூறியதாவது,  மக்களோடு மக்களாக இருக்கும் இயக்கமே அதிமுக. தேர்தல் வந்தால் மீண்டும் அதிமுகவை அரியணையில் ஏற்ற மக்கள் தயாராக உள்ளனர். சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை அதிமுக செய்து வருகிறது.
 
பிரசாந்த் கிஷோர் எழுதித் தரும் புதுப்புது தலைப்புகளில் என்ன செய்தாலும்,  திமுகவால் தேர்தலில் சாதிக்க முடியாது. கனிமொழி உள்ளிட்டோர் இமயமலையில் இருந்து கன்னியாகுமரி வரை பிரச்சாரம் செய்தாலும் அதிமுக கவலைப்படாது என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்