இந்த சூழ்நிலையிலயும் காசு வாங்க நினைப்பது துரோகம்: நகைச்சுவை நடிகர் ஆவேசம்

ஞாயிறு, 19 ஏப்ரல் 2020 (08:43 IST)
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த போதிலும் நாளை முதல் டோல்கேட்டில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நிதி பற்றாக்குறை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்த போதிலும் இதற்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது 
 
மக்களின் அடிப்படைத் தேவைகளான அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டுமே தற்போது இயங்கி கொண்டிருக்கும் நிலையில் டோல்கேட் கட்டணம் வசூலித்தால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. மேலும் மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மத்திய அரசு தனது முடிவில் இருந்து பின் வாங்காமல் நாளை முதல் டோல்கேட் கட்டணத்தை வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் இது குறித்து பிரபல காமெடி நடிகர் பாலசரவணன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஊரடங்கு மே 3 வரை... ஆனால் ஏப்ரல் 20ந் தேதியிலிருந்து டோல்கேட்டில் வசூல்.. இப்பொழுது காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களே அதிகம்.. இந்த மாதிரி சூழ்நிலையிலயும் அந்த வண்டிகளை நிறுத்தி காசு வாங்க நினைக்கும் எண்ணம் துரோகம்... வாழ்க இந்தியா’

ஊரடங்கு மே 3 வரை...ஆனால் ஏப்ரல் 20ந் தேதியிலிருந்து Toll gateல வசூல்..இப்பொழுது காய்கறி,பால் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களேஅதிகம்..இந்த மாதிரி சூழ்நிலையிலயும் அந்த வண்டிகளை நிறுத்தி காசு வாங்க நினைக்கும் எண்ணம் துரோகம்...வாழ்க இந்தியா

— Bala saravanan actor (@Bala_actor) April 18, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்