பி.எட் வினாத்தாள் கசிவு விவகாரம்: ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் டிஸ்மிஸ்..!

Siva

வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (09:33 IST)
பி.எட் வினாத்தாள் கசிந்த  நிலையில் ஆன்லைனில் புதிய வினாத்தாள் அனுப்பப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
 
 பி.எட், எம்.எட் படிக்கும்  முதல் ஆண்டு மற்றும் 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர்  தேர்வுகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று பி.எட் 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு ‘கிரியேட்டிங் அன் இன்குளூசிவ் ஸ்கூல்’ என்ற பாடத்திற்கான தேர்வு தொடங்குவதற்கு முன்பே சமூக வலைதளங்களில் கேள்வித்தாள் கசிந்தது

இதையடுத்து உடனடியாக பல்கலைக்கழக நிர்வாகம் புதிய வினாத்தாள் ஆன்லைன் வாயிலாக தேர்வு மையங்களுக்கு அனுப்பியது. இந்நிலையில்  பி.எட் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்த நிலையில், ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக பணியாற்றிவந்த என்.ராமகிருஷ்ணன் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.  இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்