சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒன்றில் 11 வயதான மாற்றுத் திறனாளி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக 17 பேர் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தணடணை விதிக்கப்பட்ட காவலாளி பழனி, சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததால் அவர் லுங்கியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என சிறைத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒன்றில் 11 வயதான மாற்றுத் திறனாளி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அங்கு பணிபுரிந்து செக்யூரிட்டி, லிஃப்ட் ஆபரேட்டர் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 17 பேரின் மீதும் மகளிர் நீதி மனறத்தில் குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது.
இதுதொடர்பான நேற்றைய விசாரணையில் ’குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடுமையான குற்றம் செய்திருந்தால் கைது செய்த 30 நாளைக்குள் குண்டர் சட்ட நடவடிக்கை எடுத்திருக்கப்பட வேண்டும். ஆனால் சம்மந்தப்பட்டவர்கள் மீது 45 நாட்களுக்குப் பிறகே குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. அதனால் அவர்கள் மீதான் குண்டர் சட்ட நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது’ என நீதிமன்றம் அறிவித்தது.