சிக்னலில் நிற்காமல் போனால் தானியங்கி அபராத இயந்திரம்: சென்னையில் அறிமுகம்!

வியாழன், 1 ஜூலை 2021 (14:28 IST)
சென்னையில் உள்ள சாலைகளில் சிக்னலில் நிற்காமல் அல்லது சிக்னல் விதிமுறைகளை மீறி சென்றால் தானியங்கி அபராதம் மூலம் அவர்களது செல்போனுக்கு அவராக ரசீது அனுப்பப்படும் என்று சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
சென்னையில் சிக்னலை மீறுவது சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் போலீசார் அவ்வப்போது சிக்னலை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இந்த நிலையில் சிக்னலை மீறுபவர்களின் வாகன எண்ணை படம் பிடித்து அதன் மூலம் அவர்களுடைய செல்போனுக்கு தானியங்கி அபராத தொகை ரசீது அனுப்பும் முறை கடந்த சில நாட்களுக்கு முன்னர் சோதனை செய்யப்பட்டது. இதில் ஒரு சில குறைகள் இருந்த நிலையில் அந்தக் குறைகள் தற்போது நிவர்த்தி செய்யப்பட்டு தானியங்கி அபராத இயந்திரம் இன்று முதல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சென்னயில் 5 இடங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய முறையை சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் அவர்கள் அறிமுகம் செய்து வைத்து பேசியப்போது, ‘இனி சிக்னல் விதிகளை மதிக்காமல் செல்பவர்களுக்கு அவருடைய வண்டி எண் ஸ்கேன் செய்யப்பட்டு அதன் மூலம் அவர்களுடைய மொபைல் எண்ணுக்கு அபராத ரசீது செய்து அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளார். எனவே அனைவரும் சிக்னல் விதிகளை மீறாமல் பயணம் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்