திருத்தணி அடுத்த அம்மையார் குப்பம் பகுதியை சேர்ந்தவர் ருத்ர மூர்த்தி(51). இவர் தனியார் வங்கியில் வீடு கட்டுவதற்காக ரூ.12 லட்சம் கடன் வாங்கியதாகவும், முறையாக கடனை திருப்பி செலுத்தவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதனால் திருவள்ளுரில் உள்ள விரைவு நீதிமன்றத்தில் வங்கியின் சார்பில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் சில வாரங்களுக்கு முன்பு வங்கிக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடனாக பெற்ற தொகைக்கு வங்கிக்கு காசோலை கொடுத்த விவகாரத்தில் செக் மோசடி வழக்கு பூந்தமல்லியில் உள்ள விரைவு நீதிமன்றத்திலும் வங்கி சார்பில் வழக்கு நடந்து வந்தது.