தொடங்கியது சட்டசபை: ஜெயலலிதா-ஸ்டாலின் ஒருவொருக்கொருவர் வணக்கம் தெரிவித்தனர்

புதன், 25 மே 2016 (11:20 IST)
15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக 134 இடங்களை கைப்பற்றி ஆட்சியில் தொடர்கிறது. இந்த ஆட்சியின் முதல் சட்டசபை கூட்டம் தொடங்கியது.


 
 
சட்டசபை கூட்டத்துக்கு வந்த முதலமைச்சர் ஜெயலலிதாவும், எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினும் ஒருவொருக்கொருவர் வணக்கம் தெரிவித்தனர். தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள செம்மலை சட்டசபை உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
 
மறைந்த உறுப்பினருக்கு இரங்கல் செலுத்தினர். இன்று அவையில் மறைந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சீனிவேலுக்கு அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.
 
சட்டமன்ற உறுப்பினராக ஜெயலலிதா பதவியேற்றுக்கொண்டார், பின்னர் ஓ.பன்னீர்செல்வம் என ஒவ்வொரு உறுப்பினரும் பதவியேற்றுக்கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்