இந்நிலையில், இன்று காலை, பள்ளியை அங்கிருந்து காலி செய்ய வேண்டும் என கட்டிட உரிமையாளர் வற்புறுத்தியதாக தெரிகிறது. இதனையடுத்து, அங்கு படித்துக்கொண்டிருந்த மாணவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அதன் பின் அந்த மாணவர்கள் வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள ஒரு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், பள்ளி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை, இது தொடர்பாக வெளிவரும் செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், ரஜினி சார்பில் பள்ளியின் முதல்வர் மற்றும் லதா ரஜினியின் வக்கில் ரவிச்சந்திரன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது “பள்ளி நிர்வாகத்தின் மீது நில உரிமையாளர் தவறான தகவல்களை பரப்பி வருகிறார். மாதா மாதம் வாடகை தரப்பட்டு வரும் நிலையில் நிர்வாகத்தை இழிவுப்படுத்த இந்த மாதிரி செய்திகளை பரப்பி வருகிறார். நிச்சயம் அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களின் கல்வி எந்தவிதத்திலும் பாதிக்காது, மாற்று இடத்தில் செயல்படும்” என்றார்.