அருள்மிகு ஶ்ரீ கைலாசநாதர் சமேத செண்பகவல்லி கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா!

வியாழன், 21 டிசம்பர் 2023 (10:03 IST)
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ கைலாசநாதர் சமேத செண்பகவல்லி கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா* இதையட்டி அங்கு யாகசாலை அமைக்கப்பட்டு பூஜைகள் நடந்தது.


 
இதனை தொடர்ந்து சனிபகவானுக்கு பால் இளநீர் சந்தனம் ஜவ்வாது மஞ்சள் தேன் போன்ற 21 வகை அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தது.

தொடர்ந்து மல்லிகை, ரோஜா, முல்லை, அரளி, செம்பருத்தி, செவ்வரளி, தாமரை, கனகாம்பரம், சாமந்திப்பூ, செவ்வந்திப்பூ,தாழம்பூ, வாடாமல்லி, ஜாதிமல்லி, மலர்கள் கொண்ட சிறப்பு அலங்காரம், அபிஷேகம், பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது.

இந்த பகுதி சுற்று வட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் மூலவர் கைலாசநாதர் செண்பகவள்ளி அம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடந்தது. இதை போலவே மாரியம்மன் கோவில் அருகில் லட்சுமி விநாயகர் கோவிலில் உள்ள நவகிரக சன்னதியில் சனிபகவானுக்கு பக்தர்கள் விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்