ரஜினி உடல்நலம்: அமெரிக்க மருத்துவர்களுடன் அப்பல்லோ மருத்துவர்கள் ஆலோசனை!

ஞாயிறு, 27 டிசம்பர் 2020 (15:44 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த இரண்டு நாட்களாக ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் இன்று மாலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ரஜினி உடல்நிலை குறித்து அமெரிக்க மருத்துவர்களுடன் அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் காணொளி மூலம் ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளியாகி உள்ளது
 
இந்த ஆலோசனையில் ரஜினிக்கு எடுக்கப்பட்ட பரிசோதனைகள் மற்றும் அதன் முடிவுகளின் அடிப்படையில் அமெரிக்க மருத்துவர்களுடன் ஆலோசனை செய்ததாகவும் இந்த ஆலோசனைக்கு பின்னர் ரஜினிகாந்த்தை டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவமனை மருத்துவர்கள் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
இதனை அடுத்து ஹைதராபாத் மருத்துவமனையில் இருந்து இன்னும் சற்று நேரத்தில் நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அவர் இன்னும் சில நாட்கள் ஐதராபாத்தில் இருப்பார் என்றும் சில நாட்கள் கழித்து அவர் சென்னை வருவார் என்றும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்