கலைகிறதா தேமுதிக கூடாராம்? - மாவட்ட செயலாளர் ஒருவர் திமுகவில் இணைவு

வெள்ளி, 1 ஜூலை 2016 (14:34 IST)
நாமக்கல் மாவட்ட தேமுதிக செயலாளர் சம்பத், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைத்துக் கொண்டுள்ளார்.
 

 
தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு கட்சியை கலைத்துவிடுங்கள் என்று 14 மாவட்டத்தை சேர்ந்த தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கடிதம் எழுதியதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின.
 
இதையடுத்து தேமுதிக தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, இந்த கடிதம் பொய்யானது என்றும், தேமுதிகவில் இருந்து பிரிந்து சென்ற சந்திரகுமார், பார்த்திபன் உள்ளிட்ட 5 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூடுதல் டி.ஜி.பி. திரிபாதியிடம் புகார் அளித்தனர். 
 
இந்நிலையில், தேமுதிகவிற்கு மேலும் ஒரு அடி விழுந்துள்ளது. நாமக்கல் மாவட்ட தேமுதிக செயலாளர் சம்பத், இன்று காலை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைத்துக் கொண்டுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

வெப்துனியாவைப் படிக்கவும்