ஆதிதிராவிட நல விடுதிகளில் உணவு தரம் இல்லை என்று அண்ணாமலை குற்றச்சாட்டு கூறியதை குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தார். "அண்ணாமலை ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பார். டெல்லி சென்றார், அங்கு பளார் பளார் என அறை விட்டு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அதன் பிறகு இங்கே வந்து அதை மறைக்க எதையாவது பேசி தானே ஆகணும்.
ஆதிதிராவிடர் நல விடுதிகளில் உணவு தரம் இல்லை என்றால், அவர் சொல்வதை ஏற்றுக்கொண்டு ஆய்வு செய்யலாம். அப்படி இருந்தால், நிச்சயமாக வருத்தம் தெரிவித்துக்கொண்டு அந்த குறைகளை சரி செய்ய அரசு தயாராக இருக்கிறது. குறைகளை சொல்லக்கூடாது என்பதல்ல; ஆனால், குறைகள் கூட குற்றச்சாட்டுகளாக மாறும்போதுதான் நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது," என்று தெரிவித்தார்.
அண்ணாமலை கூறிய கருத்தை ஏற்றுக்கொண்டு, அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும். அப்படி ஏதாவது குறைகள் இருந்தால், கண்டிப்பாக அவை தீர்க்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.