500 கோடியே 1 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்: ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்..!

சனி, 29 ஏப்ரல் 2023 (14:49 IST)
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி 500 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பிய நிலையில் 500 கோடியே ஒரு ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என ஆர் எஸ் பாரதிக்கு அண்ணாமலை பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னால் திமுக அமைச்சர்கள் மற்றும் முதல்வரின் குடும்பத்தினர் குறித்த சொத்து பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இதனால்  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி 500 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க நோட்டீஸ் அனுப்பியிருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
இதனை அடுத்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில் ஆருத்ரா விவகாரம் தொடர்பாக அண்ணாமலை மீது குற்றம்சாட்டிய நிலையில் இந்த  நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது
 
ஆர்.எஸ்.பாரதி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், இல்லையெனில் ரூ.500 கோடியே ஒரு ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் இல்லையென்றால் ஆர்.எஸ்.பாரதி மீது அவதூறு வழக்கு தொடரப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்