இந்த போட்டியில் சி எஸ் கே அணி வீரர்கள் ஏராளமான பீல்டிங் தவறுகளை செய்தார்கள். ஷிவம் துபே ஆமை வேகத்தில் த்ரோ செய்ததால் ஒரு ரன் அவுட் மிஸ் ஆனது. அதே போல தோனி செய்த ஒரு த்ரோவை குறுக்கே புகுந்து தடுத்த பதிரானாவாலும் ஒரு ரன் அவுட் மிஸ் ஆனது. இந்த இரண்டு சம்பவங்களின் போதும் தோனி தன்னுடைய பொறுமையை இழந்து ஆவேசமடைந்து இரு வீரர்களையும் கோபித்துக் கொண்டார். வழக்கமாக தோனி மைதானத்தில் கூலாக செயல்பட்டு கூல் கேப்டன் என்ற பெயரைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டி முடிந்த பின்னர் பேசிய சி எஸ் கே அணி கேப்டன் தோனி “இலக்கு சற்று மேலே இருந்தது. காரணம் முதல் ஆறு ஓவர்கள், அதிக ரன்களை கொடுத்தது, ஆனால் அதே நேரத்தில் ஆடுகளம் அந்த நேரத்தில் பேட்டிங் செய்ய சிறந்தது. அவர்கள் இன்னிங்ஸை முடிக்கும் போது கூட எட்ஜ்கள் எல்லைகளை நோக்கி சென்று கொண்டே இருந்தது. அவர்கள் சம ஸ்கோரைப் பெற்றனர், எங்களால் ரன்களை கட்டுபடுத்த முடியவில்லை. பத்திரனா பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது என்பதை நான் உணர்ந்தேன்.” எனக் கூறினார்.