இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் “தமிழகத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் கட்சியான பாஜகவுக்கு உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் வென்று செல்வாக்கை காட்ட வேண்டியுள்ளது. அதேசமயம் அதிமுக போன்ற பெரிய கட்சிகளுக்கும் தொகுதியை பங்கிடுவதில் சிரமங்கள் உள்ளன. நாங்கள் அதிமுகவினரோடு நடத்திய பேச்சுவார்த்தையில் போதிய இடங்கள் கிடைக்கவில்லை. என்றாலும் பாஜக தொண்டர்கள், தலைவர்கள் தேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என விரும்புகிறார்கள். அதனால் பாஜக இந்த உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதால் அதிமுக – பாஜக இடையேயான உறவில் எந்த பாதிப்பும் இல்லை.