எங்களுடைய போட்டி நாம் தமிழர் கட்சி அல்ல.. அவரை யாரும் கண்டுகொள்வதில்லை.. அண்ணாமலை

Mahendran

வியாழன், 4 ஏப்ரல் 2024 (13:04 IST)
எங்களுடைய போட்டி நாம் தமிழர் கட்சியுடன் அல்ல என்றும் பின்னர் எதற்காக நான் சீமானுடன் பொது விவாதம் செய்ய வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியுள்ளார்.
 
கடந்த சில நாட்களுக்கு முன் பிரச்சாரம் செய்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தங்களுடைய கட்சி சின்னம் பறிபோனதற்கு பாஜக தான் காரணம், அண்ணாமலை தான் காரணம் என்றும் இது குறித்து விவாதிக்க அண்ணாமலை தயாரா என்றும் சவால் விட்டிருந்தார்.

இதுகுறித்த கேள்வியை அண்ணாமலை இடம் செய்தியாளர்கள் பேசியபோது எங்களுடைய போட்டி நாம் தமிழர் கட்சியல்ல என்றும் பின்னர் எதற்காக நான் சீமானுடன் பொது விவாதம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்

மேலும் சீமானை யாரும் கண்டு கொள்வதில்லை என்றும் கவனயீர்ப்புக்காக யாரையாவது பிடித்து இழுத்து பேசி வருகிறார் என்றும் அவர் கூறியுள்ளார். அண்ணாமலையின் இந்த கருத்துக்கு பலர் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்

கண்டுகொள்ளாத கட்சிக்கா 30 லட்சம் வாக்குகள் கிடைத்துள்ளது? அப்புறம் எதற்காக 2024க்கு அப்புறம் நாம் தமிழர் கட்சி இருக்காது என்று அண்ணாமலை சொன்னார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு அண்ணாமலை ஆதரவாளர்கள் ’15 வருடமாக கட்சி நடத்தி வரும் சீமான் ஒரு கவுன்சிலர் கூட இல்லாமல் இருக்கும் நிலையில் அவருடன் எதற்காக இந்தியாவையே ஆட்சி செய்யும் ஒரு கட்சி பொது விவாதம் செய்ய வேண்டும்? என்றும் பதிலடி கொடுத்துள்ளனர்.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்