அறிவாலயம் அரசு இதற்கு ஒரு வழி செய்ய வேண்டும்: அண்ணாமலை

திங்கள், 6 ஜூன் 2022 (22:15 IST)
வறண்டு கிடக்கும் கால்வாய்களில் நீர் பாய்ந்திட முல்லை பெரியார் அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திட  அறிவாலயம் அரசு வழிவகை செய்யவேண்டும் என்பதே இம்மாவட்ட விவசாயிகளின் கோரிக்கை ஆகும் என்றும், பேபி அணையின் பராமரிப்பு பணிகளின் தற்போதைய நிலை என்ன என்பதையும் அரசு விளக்க வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
 
மேலும் இன்று தமிழக பாஜக கொள்கைகளை ஏற்று நமது பாரத பிரதமர் திரு 
நரேந்திரமோடி அவர்களின் விவசாய நலத் திட்டங்களில் பயனடைந்ததால் ராமநாதபுர மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாய குடி மக்கள் நமது கட்சியில் இன்று இணைந்தனர்
 
இன்று நடைபெற்ற கூட்டத்தை ஒருங்கிணைத்த விவசாய அணியின் மாநில பொதுச் செயலாளர் திரு  வைகை பிரவீன் அவர்களுடன் இணைந்து இயற்கை விவசாயத்தைச் சிறப்பாகச் செய்து வரும் திரு தரணி முருகேசன் அவர்களை  தமிழக பாஜக  சார்பாகக் கவுரவ படுத்தியதைப் பெருமையாகக் கருதுகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்