சாமியர் முன் தரையில் அமர்வது தவறில்லை: நே.என்.நேருவுக்கு அண்ணாமலை ஆதரவு!

திங்கள், 14 மார்ச் 2022 (18:47 IST)
மேல்மருவத்தூர் சாமியார் பங்காரு அடிகளார் முன் அமைச்சர் கே என் நேரு தரையில் உட்கார்ந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சாமியார் முன் தரையில் அமர்வது தவறில்லை என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் 
 
சமீபத்தில் மேல்மருவத்தூர் சாமியார் பங்காரு அடிகளாரை அமைச்சர் கே என் நேரு சந்தித்தப் புகைப்படம் இணையதளங்களில் வைரலானது
 
இந்த புகைப்படத்தில் மேல்மருவத்தூர் சாமியார் பங்காரு அடிகளார் நாற்காலியிலும், அமைச்சர் கே என் நேரு தரையிலும் உட்கார்ந்து இருந்தது கடுமையாக விமர்சனம் செய்தனர்.
 
 இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சாமியார்கள் முன் தரையில் அமர்ந்து அவர்களுடைய கருத்து கேட்பது தவறு இல்லை என்றும் திமுக இதை தேவையில்லாமல் அரசியல் செய்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்