சிவகங்கை அரண்மனையில் இராணி மதுராந்தகி நாச்சியாரை சந்தித்த அண்ணாமலை: வைரல் புகைப்படம்..!

செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (13:43 IST)
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களாக என் மண் என் மக்கள் என்ற நடைபயணத்தை தொடங்கி நடத்தி வருகிறார் என்பதும் அவரது நடை பயணத்திற்கு பொதுமக்கள் மற்றும் பாஜகவினரின் அமோக ஆதரவு கிடைத்து வருகிறது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் நடை பயணத்தை முடித்துவிட்டு சிவகங்கை மாவட்டத்தில் அண்ணாமலை தொடர்ந்து வரும் நிலையில் தற்போது அவர் சிவகங்கை  ராணி மதுராந்தகி நாச்சியார் அவர்களை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். இது குறித்து அண்ணாமலை தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது
 
நேற்று, பெருமதிப்பிற்குரிய இராணி மதுராந்தகி நாச்சியார் அவர்களை, அவர்களின் சிவகங்கை அரண்மனைக்கு நேரில் சென்று சந்தித்தோம். பெருமதிப்பிற்குரிய ராணி அவர்களிடம்,  என் மண் என் மக்கள் பயணம் குறித்து எடுத்துக் கூறி, அவர்களின் ஆசிகளைப் பெற்றுக் கொண்டோம். முன்னாள் மத்திய அமைச்சர் திரு பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்