மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லையா என்ற கேள்வி எழுப்பினார். அதேபோல் கவிஞர் வைரமுத்து மீது பாடகி ஒருவர் கொடுத்த புகாருக்கு தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இது குறித்து கூறிய போது விசாரணை நடந்து கொண்டிருக்கிறது, ஆனால் கைது செய்தால் தான் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையே தொடர்வோம் என்று கூறுவது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. மல்யுத்த வீரர் வீராங்கனைக்கு வீராங்கனைகளுக்கு உச்சநீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லையா? என்ற கேள்வியை எழுப்பினார்.