தமிழகத்தில் 10 மாதங்களுக்கு பின் பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தல்!

செவ்வாய், 19 ஜனவரி 2021 (08:55 IST)
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் 10 மாதங்களுக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது 
 
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது என அறிவித்துள்ளதை அடுத்து மாணவ மாணவிகள் இன்று பள்ளிகளை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர் 
 
10, 12 வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் ஏற்கனவே வழிகாட்டி நெறிமுறைகளை மாணவர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. ஒவ்வொரு வகுப்பிலும் 25 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், மாணவர்கள் அனைவரும் வகுப்பறை தொடங்கும் முதல் முடியும் வரை மாஸ்க் அணிய வேண்டும் என்றும், அவ்வப்போது சனிடைசர் கொண்டு தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து ஒத்துழைக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 10 மாதங்களுக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதை அடுத்து இன்று காலை மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியுடன் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்