அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்படுகிறதா??

Arun Prasath

புதன், 18 டிசம்பர் 2019 (08:24 IST)
அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்படுவது குறித்தான முடிவுகளை எடுக்க 5 அமைச்சர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டுமென்றால் தமிழகத்தின் இட ஒதுக்கீடு முறையில் பாதிப்பு ஏற்படாது என மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க வேண்டும் என தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

இதன் அடிப்படையில் மத்திய அரசு உறுதியளிக்கும் பட்சத்தில் அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்படுமா? என 5 அமைச்சர்கள் அடங்கிய ஆய்வு செய்யவுள்ளது. இந்த குழுவில் கல்வி அமைச்சர் செங்கோட்டையன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், மின் அமைச்சர் தங்கமணி, சட்ட அமைச்சர் சிவி சண்முகம், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்