பணம் கேட்டு மிரட்டிய திமுக எம்.எல்.ஏ மீது வழக்குப் பதிவு ! திமுக அதிர்ச்சி ...

செவ்வாய், 17 டிசம்பர் 2019 (15:48 IST)
ஒரு கோடி ரூபாய் கேட்டு தொழிலதிபரை மிரட்டிய திமுக எம்.எல்.ஏ பி.கே. சேகர்பாபு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சவுகார் பேட்டையில் உள்ள மிண்ட் தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பை தொழிலபதிபர் ஜெயின் என்பவர் வாங்கினார். அதில், ஏற்கனவே வசித்து வந்த 12 பேர் காலி செய்த நிலையில்,கண்பத்லால் என்பவர் மட்டும் அவ்விடத்தை காலி செய்ய மறுத்துள்ளார்.
 
அதே சமயம் துறைமுகம் தி.மு.க. எம்.எல்.ஏ வான சேகர்பாபுவிடம் இந்த விவகாரத்தை முடித்துவைக்குமாறு உதவி கேட்டுள்ளார்.
 
அதேமாதிரி,சேகர்பாபு கண்பத்லாலுக்கு ஆதவாக பேசியதாகவும், மேலும், நகைக் கடையை காலி செய்தால், இழப்பு ஏற்படு எனக் கூறி  தன்னிடம் ஒரு கோடி ரூபாய் கேட்டதாகவும் ராஜ்குமார் ஜெயின் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
 
மேலும், 35 லட்சம் ரூபாய் பணத்தை ஜெயின் சேகருக்கு கொடுத்துள்ள நிலையில், மீதி பணத்தை சேகர்பாபு கேட்டு மிரட்டுவதாக  ராஜ்குமார் ஜெயின் மனுவில் புகார் அளித்துள்ளார்.
 
இதனையடுத்து, சேகர்பாபு உள்ளிட்ட 8 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்