தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் குடியிருப்புகளை இடிக்க பரிந்துரை!

செவ்வாய், 25 ஜனவரி 2022 (14:44 IST)
தமிழகம் முழுவதும் பழமையான குடியிருப்புகளை ஆய்வு செய்ததில் 20 ஆயிரம் குடியிருப்புகளை இடிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் சென்னை திருவொற்றியூர் பகுதியில் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 25 ஆண்டுகள் பழமையாம அரசு குடியிருப்பு கட்டிடங்களை அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்ப குழு ஆய்வு செய்தது.

இந்த ஆய்வில் 22,271 குடியிருப்புகள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில் அதில் 20,453 குடியிருப்புகள் சேதமடைந்திருப்பதாக ஆய்வு குழு தெரிவித்துள்ளது. இவற்றை இடித்துவிட்டு புதிய குடியிருப்புகளை கட்ட ஆய்வு குழு பரிந்துரைத்த நிலையில் இதுகுறித்து தமிழக அரசு விரைவில் முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்