இதையடுத்து நீட் தேர்வால் மருத்துவர் ஆக முடியாமல் உயிரிழந்த அனிதாவின் தந்தை இதில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் குழுவின் தலைவர் ஏ கே ராஜனுக்கு கடித எழுதியுள்ளார். அதில் 1200க்கும் 1176 மதிப்பெண்கள் பெற்ற அனிதாவுக்கு மருத்துவம் படிக்க தகுதி இல்லை எனக் கூறிவிட்டு, நீட் தேர்வில் 720 மதிப்பெண்ணுக்கு 150 மதிப்பெண்கள் எடுத்தவர்களை பணமிருந்தால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை வழங்குகின்றனர் எனக் கூறியுள்ளார். முன்னதாக நடிகர் சூர்யா தனது கருத்தை அறிக்கையாக வெளியிட்டார்.