தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள் துன்புறுத்தப்படுவதாகவும், மனித உயிரிழப்பும், காயங்களும் ஏற்படுவதாகவும் கூறி அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன.
இதையடுத்து ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. எனினும், தமிழக அரசு அவசரச் சட்டத்தை பிறப்பித்து ஜல் லிக்கட்டு நடைபெற அனுமதி பெற்றது. அதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.