ஜெ.விற்கும் சசி.க்கும் தரகர் வேலை பார்த்தது யார் தெரியுமா?: அன்புமணி விளக்கம்!

வியாழன், 16 நவம்பர் 2017 (17:15 IST)
இந்தியாவின் மிகப்பெரிய வருமான வரி சோதனையை சசிகலா குடும்பத்தை குறிவைத்து வருமான வரித்துறை நடத்தி முடித்துள்ளது. இந்த சோதனை அரசியல் உள்நோக்கத்துடன் நடத்தப்பட்ட சோதனை என பல அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.


 
 
187 இடங்களில் சோதனை நடத்திய வருமான வரித்துறை கட்டுக்கட்டாக ஆவணங்களை கைப்பற்றியதாக செய்திகள் வருகின்றன. ஆனால் இந்த சோதனை தோல்வியில் முடிந்துள்ளதாகவும், தங்களை மிரட்டி பணிய வைக்க நடத்தப்பட்ட சோதனை எனவும் சசிகலாவின் தம்பி திவாகரன் கூறியுள்ளார்.
 
இந்நிலையில் வருமான வரித்துறை சோதனை குறித்து சென்னை விமான நிலையத்தில் பேசிய பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், சசிகலாவிற்கும், ஜெயலலித்தாவிற்கும் தரகர்களாக இருந்து பணம் வசூல் செய்து கொடுத்த ஒ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரும் வருமானவரித்துறை சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்