அதிமுக கூட்டணியில் கிட்டத்தட்ட பாமக இணைந்து விட்டதாக கூறப்பட்ட நிலையில் திடீரென பாஜக உடன் ரகசிய பேச்சுவார்த்தை நடந்ததாகவும், சென்னையில் உள்ள ராமதாஸ் மகள் வீட்டில் எல் முருகன் மற்றும் அன்புமணி ஆகிய இருவரும் ரகசியமாக பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் அதிமுகவில் பாமக இணைவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட நிலையில் திடீரென மத்திய இணை அமைச்சர் எல் முருகன் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவரும் தனியார் ஹோட்டலில் முதலில் சந்தித்ததாகவும் அதன் பின்னர் திடீரென ராமதாஸ் மகள் இல்லத்தில் ரகசிய சந்திப்பு நடத்தியதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியது