மோடி வந்துவிட்டு சென்ற பிறகு கூட்டணியில் திடீர் திருப்பம்? பாஜக கூட்டணியில் பாமக, தேமுதிக?

Mahendran

செவ்வாய், 5 மார்ச் 2024 (13:07 IST)
பாஜக கூட்டணியில் இதுவரை பெரிய கட்சிகள் எதுவும் சேராத நிலையில் நேற்று பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்து சென்ற பிறகு திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் பாமக மற்றும் தேமுதிக ஆகிய இரு கட்சிகளும் பாஜக கூட்டணிக்கு வர அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மும்முனை கூட்டணி மோதும் என்பதும் நாம் தமிழர் சீமான் தனித்து போட்டியிடுவார் என்பதும் கூறப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் ஒரு பக்கம் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சு வார்த்தை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் பாமக மற்றும் தேமுதிக எதில் சேரும் என்பதில் தான் தற்போது கேள்வியாக உள்ளது. 
 
பாமக மற்றும் தேமுதிக ஆகிய இரு கட்சிகளுமே அதிமுகவில் இணைய தான் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் நேற்று பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது அண்ணாமலையை அழைத்து சில ஆலோசனை கூறியதாகவும் எந்தெந்த கட்சியை எப்படி அணுக வேண்டும் என்று சில டிப்ஸ்களை கூறியதாகவும் அதன்படி அடுத்ததாக அண்ணாமலை காய் நகர்த்த உள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
இதனை அடுத்து பாமக மற்றும் தேமுதிக ஆகிய இரு கட்சிகளுமே பாஜக கூட்டணியில் இணையும் அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்