சட்டவிரோதமாக செயல்பட்ட கல்குவாரி: புகார் அளித்த சமூக ஆர்வலர் படுகொலை

திங்கள், 12 செப்டம்பர் 2022 (12:41 IST)
சட்டவிரோதமாக செயல்பட்ட கல்குவாரி குறித்து காவல்துறையில் புகார் அளித்த சமூக ஆர்வலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
 
கரூர் மாவட்டம் கரூர்குப்பம் கிராமத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த கல்குவாரி குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்த ஜெகநாதன் என்ற சமூக ஆர்வலர் கொடூரமான முறையில் சரக்குந்து ஏற்றி படுகொலை செய்யப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது!
 
இயற்கை வளத்தை பாதுகாப்பதற்காக போராடிய  ஒருவரை கொல்லத் துணிகிறார்கள் என்றால், அவர்களுக்கு வலிமையான பின்னணி இருப்பதாகவே தோன்றுகிறது. அது குறித்து விசாரணை நடத்துவதுடன், ஜெகநாதனின் படுகொலைக்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும்!
 
நாட்டின் வளத்தை காக்க போராடி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்குக.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்