பாஜகவில் இணைந்தார் அமமுக வேட்பாளர்: தினகரன் அதிர்ச்சி

வெள்ளி, 26 மார்ச் 2021 (17:36 IST)
பாஜகவில் இணைந்தார் அமமுக வேட்பாளர்: தினகரன் அதிர்ச்சி
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மொத்தம் ஐந்து கூட்டணிகள் போட்டியிடுகின்றன. திமுக அதிமுக கூட்டணிகள் தவிர கமல் கூட்டணி, தினகரன் கூட்டணி மற்றும் சீமான் கூட்டணி ஆகிய மூன்று கூட்டங்கள் தனித்தனியாக போட்டியிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கூட்டணியில் தேமுதிக இணைந்தது என்பதும் அந்த கட்சிக்கு 60 தொகுதிகள் தினகரன் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோக ஒருசில சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கியது போக மீதி தொகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் 

இந்த நிலையில் திருநள்ளாறு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் பாஜகவில் இணைந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் தினகரனுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநள்ளாறு தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் தர்பாண்யம் என்பவர் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் மற்றும் அர்ஜூன் ராம் மேக்வால் ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இந்த தகவல் பெரும் பரபரபபி ஏற்படுத்தியுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்