இதுக்கு பேர்தான் அம்மா அதிரடி: பாடியில் ‘அம்மா’ திரையரங்கம்

திங்கள், 18 ஜூலை 2016 (10:39 IST)
பாடி மேம்பாலம் அருகே 3.94 ஏக்கர் பரப்பளவில் உள்ள அரசுக்கு சொந்தமான காலி இடத்தில், ‘அம்மா’ திரையரங்கம் அமைக்கப்படும் என மேயர் சைதை துரைசாமி அறிவித்துள்ளார்.


 

 
சென்னையில் மக்கள் பொழுது போக்கும் வகையில், குறைந்த கட்டணத்தில் அம்மா திரையரங்கம் அமைக்கப்படுகிறது. திரையரங்கம் அமைக்க தெற்கு உஸ்மான் சாலை உட்பட பல்வேறு இடங்களில், இடம் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.
 
தாராளமான இடவசதி உள்ள இடங்களில், அடுக்குமாடி வாகன நிறுத்தம், வணிக வளாகத்துடன் கூடிய திரையரங்கம் அமைக்க, மாநகராச்சி முடிவு செய்துள்ளது. 
 
இந்நிலையில், பாடி மேம்பாலம் அருகே காலியாக உள்ள அரசுக்கு சொந்தமான 3.94 ஏக்கர் நிலம், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் வணிக வளாகங்களுடன் கூடிய அம்மா திரையரங்கம் அமைக்க மாநகராச்சி ஆலோசித்து வருகிறது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
     

வெப்துனியாவைப் படிக்கவும்