பணிக்குச் செல்லும் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின்கீழ், மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின்கீழ், 2017-18-ஆம் நிதி ஆண்டில் சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பணிபுரியும் 7,225 பெண்களுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது, இதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மானிய விலையில் இருசக்கர வாகனம் பெற விரும்புவோர் அதற்கான விண்ணப்பத்தை வியாழக்கிழமை (ஜனவரி 31) மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது பதிவு, விரைவுத் தபால் மூலமாகவோ சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது