மக்களவை தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக இணைந்து கூட்டணியாக போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவுக்கு அதிகபட்சமாக ஐந்து தொகுதிகள் வரை மட்டுமே அதிமுக கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் 25 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு வைத்திருப்பதாக அமித்ஷா என்று பேசியிருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் நடைபெற்ற தென் சென்னை தொகுதி பாஜக நிர்வாகி கூட்டத்தில் பேசி அமித்ஷா வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 25 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற இலக்கு நிர்ணயிப்போம் என்று கூறியுள்ளார். இதனால் அதிமுக தரப்பு அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும், பாஜக நெருக்கடிக்கு பணிந்து அதிமுக 25 தொகுதிகளை விட்டுக்கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.