திண்டுக்கல் மாவட்டம், பழநியில், ஜூன் 24 மற்றும் 25ம் தேதி அன்று பாஜக செயற்குழு மற்றும் பொதுக்குழு நடைபெற உள்ளது.
இந்த செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்திற்கு வர வேண்டும் என, பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவிடம், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கேட்டுக் கொண்டார்.
ஆனால், சட்டசபை தேர்தலின்த போது, தமிழக பாஜக தலைவர்கள் பலரும் டெபாசிட் கூட வாங்காத காரணத்தினால், இந்த கூட்டத்தை அமித் ஷா புறக்கணித்துவிட்டதாக டெல்லிவட்டார தகவல்கள் கூறப்படுகிறது.