இனி உயிர் உள்ளவரை பாஜக தான்: சிறையில் இருந்து வெளியே வந்த அமர் பிரசாத் ரெட்டி பேட்டி..!

சனி, 11 நவம்பர் 2023 (17:27 IST)
பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் அருகே இருந்த பாஜக கொடியை காவல்துறையினர் அகற்ற முயன்ற போது  பிரச்சனை செய்ததாக அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

இதனை அடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது  ’சட்டத்தில் உண்மைக்கும் தர்மத்திற்கும் வெற்றி உண்டு, பாஜகவை ஒடுக்குவதன் மூலம் தமிழகத்தில் திமுகவுக்கு எதிர்க்கட்சி பாஜக தான் என்பது தெரியவந்துள்ளது.

காவல்துறையினர் என்னை டார்ச்சர் செய்தனர்,  என்னுடன் கைது செய்யப்பட்ட ஐந்து தொண்டர்களையும் ஜெயிலில் சந்திக்க முடியவில்லை. என் குடும்பத்தினரையும் பார்க்க விடவில்லை.

நான் ஊழல் செய்து ஜெயிலுக்கு செல்லவில்லை, கட்சிக்காக, கொள்கைக்காக சிறைக்கு சென்று உள்ளேன் என்று கூறினார். மேலும் 22 நாள் ஜெயில் வாழ்க்கையில் என்னை பழக்கிவிட்டது. இனி உயிருள்ளவரை பாஜகவில் தான் இருப்பேன்,  2026ல் பாஜக ஆட்சிதான், முதலமைச்சர் யார் என்பது உங்களுக்கே தெரியும் என்று பேசினார்.


Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்