திரையரங்குகளில் சினிமா காட்சிகள் ரத்து

செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (18:09 IST)
கருணாநிதி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் அனைத்து சினிமா காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 
திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களுக்கு மேலாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சையில் பெற்று வருகிறார். தற்போது இன்று மாலை வெளியான மருத்துவ அறிக்கையில், கருணாநிதியின் உடல்நலம் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் இன்று மாலை முதல் நாளை வரை சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்