பொதுவாகவே கோடை காலத்தில் வெயில் கொளுத்தும். அதுவும் அக்னி நட்சத்திரம் தொடங்கிவிட்டால் சொல்லவே தேவையில்லை. வழக்கமாக ஏப்ரல் மாதத்தில்தான் கோடை வெயில் தொடங்கும். ஆனால், எல்லா வருடமும் மார்ச் மாதத்திலேயே வெயில் கொளுத்த ஆரம்பித்து விடுகிறது.
மே5ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. அதனால், வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். பகலில் அனல் காற்று வீசியது. புழுக்கம் காரணமாக இரவில் வீட்டிற்குள் தூங்க முடியாமல் மக்கள் கஷ்டப்பட்டனர்.
தமிழகத்தின் பல இடங்களில் வெப்பம் 100 டிகிரியை தாண்டியது. சேலம், வேலூர், திருச்சி, நாகப்பட்டினம் மற்றும் பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் வெப்பம் மிகவும் அதிகமாக இருந்தது.
எனவே அக்னி நட்சத்திரம் எப்போது முடியும் என்று மக்கள் காத்திருந்தனர். மே5ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் இன்றோடு முடிவடைகிறது. சரியாக சொல்ல வேண்டுமென்றால் மே 5ம் தேதி அதிகாலை, 2:23 மணிக்கு அக்னி நட்சத்திரம் துவங்கியது. நாலை காளை 7:14 மணிக்கு, முடிகிறது.