ரஜினியை அடுத்து செய்தியாளர்களை சந்திக்கின்றார் கமல்ஹாசன்!

திங்கள், 30 நவம்பர் 2020 (17:53 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த பின் 2 நிமிடங்கள் மட்டும் செய்தியாளர்களை சந்தித்த நிலையில் நாளை கமலஹாசன் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளது
 
இது குறித்து மக்கள் நீதி மையம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: நாளை அதாவது டிசம்பர் 1ஆம் தேதி மக்கள் நீதி மையம் கட்சி தலைமை அலுவலகத்தில் காலை 11 மணி அளவில் கமலஹாசன் அவர்கள் பத்திரிகையாளர்களை சந்திக்க இருக்கின்றார் 
 
நிகழ்வுக்கு தமிழ் மற்றும் தேசிய ஊடகங்களின் செய்தியாளர்களை அன்புடன் அழைக்கிறோம் வருகைதரும் அனைவரும் கோவில் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அதை நிறைவேற்ற செய்தியாளர்களுக்கும் படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அந்த பத்திரிகை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
ரஜினி-கமல் அடுத்தடுத்து செய்தியாளர்களை சந்தித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்