சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்டு கடந்த மாதம் 15ஆம் தேதி சசிகலா பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று முன் தினத்தோடு ஒருமாதம் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. சசிகலாவை சிறையில் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ் என பலர் சென்று கடந்த மாதம் நேரில் சந்தித்தனர். இவர்களை தொடர்ந்து வளர்மதி, கோகுல இந்திரா, சி.ஆர்.சரஸ்வதி ஆகியோரும் சந்தித்து வந்தனர்.