இந்த நிலையில் இந்த மூன்று மசோதாக்கள் மாநிலங்களவையில் இன்று எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே தாக்கல் செய்யப்பட்டது. மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அவர்கள் இந்த மசோதாக்களை தாக்கல் செய்தார். இந்த மசோதாக்கள் எம்பிக்களின் வாக்கெடுப்பில் நிறைவேறுமா என்பது சந்தேகமே என்று பாராளுமன்ற வட்டாரங்கள் கூறி வருகின்றன
இந்த நிலையில் திடீர் திருப்பமாக பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. மாநிலங்களவையில் உள்ள அதிமுக எம்பிக்கள் வேளாண் திருத்த சட்ட மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு பதில் கார்ப்பரேட் அனுமதிக்கக் கூடாது என்றும் புதிய வேளாண் சட்டங்களால் விலை வாசி உயர்வை தடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் என்றும் அதிமுக எம்பிக்கள் தெரிவித்தனர்