கூவத்தூரில் தங்கியிருந்த எம்எல்ஏ-க்கள், தங்கள் விருப்பத்தை மீறி சசிகலாவுக்கும், அவரது கைப்பாவையான எடப்பாடிக்கும் ஆதரவு அளித்ததற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்த எம்எல்ஏக்கள் யாரும் தொகுதி உள்ளே வரக்கூடாது என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
நன்றி: நக்கீரன்
இதனை தொடர்ந்து திண்டுக்கல் சீனிவாசன் தன் தொகுதிக்கு திரும்பினார். அப்போது மக்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஊருக்குள் வந்த அவரது காரை சுற்றிவளைத்து மக்கள் கோஷமிட்டனர். கூட்டத்தில் இருந்த ஒருவர் சீனிவாசனின் வேட்டியை பிடித்து இழுத்ததில் பதற்றமடைந்த சீனிவாசன் மற்றும் அவர் ஆதரவாளர்கள் காரில் அங்கிருந்து தப்பி சென்றார்.
பொதுமக்கள் மத்தியில் சிக்கிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை பொதுமக்கள் தள்ளிவிட்டு அடிக்க முயற்சிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதிமுக அமைச்சரவையில் முதல்வார் பழனிச்சாமிக்கு அடுத்தபடியாக இரண்டாம் நிலையில் இருக்கும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கே இந்த நிலைமையா என அதிமுகவின் மற்ற எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் கதிகலங்கி உள்ளனர்.