இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சில தினங்களுக்கு முன்னர் அதிமுக மீதான தனது தாக்குதலை தொடங்கினார். குறிப்பாக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை வறுத்தெடுத்தார்.
அதிமுக அரசை வழிநடத்துவது சசிகலா எனவும், முதல்வரின் கையெழுத்து போலியாக தவறாக பயன்படுத்தப்படுகிறது. முதல்வரின் உடல்நலக்குறைவுக்கு காரணம் சசிகலா கும்பல் தான். சசிகலா உடனடியாக அப்பல்லோவை விட்டு வெளியேற வேண்டும் என மிகவும் கடுமையான விமர்சனங்களை வைத்தார் சசிகலா புஷ்பா.
அதில், எச்சையே உனக்கு பச்சை மையில் கையெழுத்திடும் பாக்கியத்தை பிச்சையிட்டது யார்? ஆனால் பகையாளியோடு உறவாடி, கூர் தீட்டிய மரத்துக்குக் குந்தகம் செய்கிறது, நன்றி கெட்ட உன் நடத்தை. போலி கையெழுத்து, போலி படிப்பு, போலி புருஷன்... என்பதுதான் பொழுதெல்லாம் உன்கூலி பிழைப்பு என்பதால் கள்ளமில்லா ஓர் நட்பை களங்கம் செய்கிறாய் என ஆரம்பித்து சசிகலா புஷ்பாவை கடுமையாக விமர்சித்துள்ளது அந்த கட்டுரை.