இந்த நிலையில், ஆளுநர் ரோசய்யாவை இன்று சந்தித்த முதல்வர் ஜெயலலிதா, ஆட்சியமைக்க உரிமை கோரி கடிதம் அளித்தார். அதற்கான ஆதரவு எம்எம்எல்-கள் கடிதத்தையும் கொடுத்தார். இதனையடுத்து, ஜெயலலிதாவை ஆட்சியமைக்க ஆளுநர் ரோசய்யா அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், புதிய அமைச்சரவை பட்டியலை ஆளுநர் மாளிகைக்கு முதல்வர் ஜெயலலிதா அனுப்பி வைத்தார். அந்த பட்டியல் மாலையில் வெளியானது. இதில், தற்போதைய அமைச்சர்கள் பலருக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் 14 புதிய முகங்களுக்கு அமைச்சர் வாய்ப்பு வழங்கி அவர்களுக்கு வழக்கம் போல் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.