ஜெயலலிதா இருந்த போது ராணுவ கட்டுப்பாடோடு இருந்த அதிமுக தற்போது எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி, தினகரன் அணி என சிதறி கிடக்கின்றன. அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த பிளவு நேற்று சட்டசபையிலும் எதிரொலித்தது. ஆனால் அது கடைசியில் சிரிப்பலையில் முடிந்தது.
இதில் நேற்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் மதுரை மேலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பெரிய புல்லான் பேசிய போது, என்னுடைய தொகுதியில் குரங்குகள் தொல்லை தாங்க முடியவில்லை. குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. அந்த அடங்காப்பிடாரி குரங்குகளை அமைச்சர்தான் அடக்க வேண்டும் என்றார்.
இதற்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதிலளித்த போது, காட்டுக்குள் மட்டுமா குரங்குகள் அட்டகாசம் செய்கின்றன. இங்கும் சில அடங்காப்பிடாரி குரங்குகள் இருக்கின்றன என அதிருப்தி எம்எல்ஏக்களை குறிவைத்துச் பேசினார். இதனை புரிந்துகொண்ட அதிமுக எம்எல்ஏக்கள் சிரிப்பலையில் மூழ்கினர்.