நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. யாரும் எதிர்பாரதவிதமாக திமுக 89 சீட்டுகளை அள்ளியது. பல இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் தோல்வியை தழுவினர். இதனால், அவர்களது தோல்விக்கு காரணமாவரகளை கண்டறிந்து, அவர்களது பதவியை பறிக்க முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். இது குறித்து, தமிழகம் முழுக்க உளவுத்துறை மூலம் விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாம். விரைவில் பலருக்கு கல்தா நிச்சயமாம். சிலக்கு அடிப்படை உறுப்பினர் பதவிக்கே வேட்டு விழப்போகிறாம்.