களங்கள் அனைத்திலும் கழகம் வெல்லும் - ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டறிக்கை!
வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (17:48 IST)
இந்த தேர்தலில் அதிமுக வரலாறு படைக்கும் வகையில் அதன் வெற்றி இருக்கும் என ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில் கடமைகள் அழைக்கின்றன கண்மணிகளே வெற்றிமாலை சூட தயாராகுங்கள் என அதீத நம்பிக்கையுடன் கூறியுள்ளனர். வரலாறு வியக்கும் வகையில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என ஆணித்தரமாக கூறியுள்ளனர்.
மேலும், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை நம்ப வேண்டாம் என அதிமுக தொண்டர்களுக்கு ஓபிஎஸ்-ஈபிஎஸ் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.